சிட்ரோயன் இ.சி 3


சிட்ரோயன் இ.சி 3
x

சிட்ரோயன் நிறுவனம் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பில்லாத பேட்டரியில் இயங்கும் காரை இ.சி 3 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.11.50 லட்சம் முதல் சுமார் ரூ.12.43 லட்சம். இரட்டை வண்ணம் கொண்டதாக இது வந்துள்ளது. எகானமி மற்றும் ஸ்டாண்டர்ட் என்ற இரண்டு விதமான ஓட்டும் நிலைகள் இதில் உள்ளன. இதில் 29.2 கிலோவாட் அவர் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் இரண்டு வேரியன்ட்கள் (லைவ், பீல்) வந்துள்ளன. இதன் அச்சில் நான்கு மின் மோட்டார்கள் உள்ளன. இதனால் இதை ஸ்டார்ட் செய்து 6.8 விநாடிகளில் 60 கி.மீ. வேகத்தை எட்டிவிட முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 107 கி.மீ. ஆகும். பிரேக் பிடிக்கும்போது வெளியாகும் சக்தியை மீண்டும் மின்சக்தியாக சேமிக்கும் வசதி கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ள பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப் பட்டால் 320 கி.மீ. தூரம் வரை ஓடும். இதில் 10.2 அங்குல தொடுதிரை உள்ளது. ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி கொண்டது. 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், மைசிட்ரோயன் கனெக்ட் செயலி உள்ளது. ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி. வசதிகளையும் கொண்டது.


Next Story