கலர்பிட் அல்ட்ரா ஸ்மார்ட் கடிகாரம்


கலர்பிட் அல்ட்ரா ஸ்மார்ட் கடிகாரம்
x

நாய்ஸ் நிறுவனம் கலர்பிட் அல்ட்ரா என்ற பெயரிலான புதிய ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.

இது 1.78 அங்குல அமோலெட் திரை, புளூடூத் 5.3 இணைப்பு வசதி கொண்டது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.3,499. கருப்பு, பிரவுன், பச்சை, கிரே உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் கிடைக்கும். இதன் மூலம் அழைப்புகளை மேற்கொள்வது, குறுந்தகவல் அனுப்புவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியும்.

இதய துடிப்பு, மகளிர் மாதவிடாய் சுழற்சி உள்ளிட்டவற்றை துல்லியமாக உணர்த்தும். தூக்க குறை பாட்டை கண்காணித்து அறிவுறுத்தும். ஸ்மார்ட்போனின் கேமராவை இயக்குவது, ஸ்மார்ட்போன் இருக்குமிடத்தை அறிய உதவுவது, வானிலை முன்னறிவிப்பு உள்ளிட்ட பல தகவல்களையும் அளிக்கும்.

1 More update

Next Story