டியோ போட்ஸ் எப் 40 இயர்போன்


டியோ போட்ஸ் எப் 40 இயர்போன்
x

ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் மி.வி. நிறுவனம் புதிதாக டியோ போட்ஸ் எப் 40 என்ற பெயரிலான வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 5.1 புளூடூத் இணைப்பு வசதி மற்றும் சுற்றுப்புற இரைச்சலை தவிர்க்கும் நுட்பம் கொண்டது. அலெக்ஸா, கூகுள் அசிஸ்ட் உள்ளிட்ட குரல்வழி கட்டுப்பாட்டு அமைப்பு மூலமும் இதை செயல்படுத்த முடியும்.

ஒரு தொடுதலின் மூலமே ஸ்மார்ட் போனுக்கு வரும் அழைப்புகளை ஏற்பது அல்லது ரத்து செய்ய முடியும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 மணி நேரம் தொடர்ந்து செயல்படும். அதற்கேற்ப இதில் 50 எம்.ஏ.ஹெச். பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. நீர், வியர்வை புகா தன்மை கொண்டது. வெள்ளை, கருப்பு, கிரே, பச்சை, நீல வண்ணங்களில் கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.999.


Next Story