எலிஸ்டா டவர் ஸ்பீக்கர்கள்


எலிஸ்டா டவர் ஸ்பீக்கர்கள்
x

ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் எலிஸ்டா நிறுவனம் இ.எல்.எஸ். எஸ்.டி 800. மற்றும் இ.எல்.எஸ். எஸ்.டி 8000. மினி என்ற பெயரிலான இரண்டு டவர் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது.

இவை இணையதள இணைப்பு மற்றும் ஸ்மார்ட் டி.வி.யில் இணைந்து செயல்படக் கூடியது. இவை முறையே 80 வாட் மற்றும் 60 வாட் திறன் கொண்டவையாக வெளிவந்துள்ளன. இதில் ஆர்.ஜி.பி. பல வண்ண எல்.இ.டி. விளக்குகள் இசையின் தன்மைக்கேற்ப ஒளிர்ந்து சூழலை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக்கும். இவை இரண்டுமே 5.1 புளூடூத் இணைப்பில் செயல்படுபவை, பண்பலை, ஏ.யு.எக்ஸ்., யு.எஸ்.பி. இணைப்பு வசதி கொண்டவை. இதை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கலாம். இவற்றின் விலை முறையே சுமார் ரூ.4,990 மற்றும் சுமார் ரூ.7,199.

1 More update

Next Story