விலை உயர்ந்த பேனாக்கள்..!


விலை உயர்ந்த பேனாக்கள்..!
x

ஸ்மார்ட் உலகில், பேனா பென்சில்களை மறந்து போனவர்களும் இருக்கிறார்கள். அதேசமயம், பேனா வாங்குவதில் அதீத அக்கறை கட்டுபவர்களும் இருக்கிறார்கள். அந்தவகையில், உலகில் இருக்கும் விலை உயர்ந்த பேனாக்களை தெரிந்து கொள்வோம்...

லா மாடர்னிஸ்டா வைர பேனா

இந்த பேனாவில் எழுதுவதா என யோசிக்கவைக்கும் இது, காரன் டிசே எனும் சுவிட்சர்லாந்து நாட்டில் செயல்படும் பேனா நிறுவன தயாரிப்பு.

ேரடியம் முலாம் பூசப்பட்ட வெள்ளி உலோகத்திலான வார்ப்பில் 20 கேரட் தரத்தில் 5,072 சிறு வைரக்கற்களும் பதிக்கப்பட்ட இப்பேனாவில் 96 ரூபி கற்களும் ஜொலிக்கின்றன.

அன்டோனியோ கவுடி உருவாக்கியுள்ள தங்க நிப் பேனாவின் விலை 1 கோடியே 80 லட்சத்து 83 ஆயிரத்து 547 ரூபாய்தான்.

ஓமஸ் பீனிக்ஸ் பிளாட்டினம் பேனா

18 கேரட் தரத்தில் தங்க நிப் கொண்ட பிளாட்டினத்தில் உருவான லிமிடெட் எடிஷன் பேனா இது. கூம்பு வடிவத்தில் பார்க்க படு பேன்சி டிஸைனில் கண்ணைப் பறிக்கும் இப்பேனாவின் விலை 40 லட்சத்து 94 ஆயிரத்து 388 ரூபாய்.

டெபால்டி பவுண்டன் பேனா

புகழ்பெற்ற ஆட்டோமொபைல் நிறுவனமான பென்ட்லி, இத்தாலிய நிறுவனமான டெபால்டியோடு இணைந்து உருவாக்கிய இப்பேனாவின் நிப் 18 காரட் தங்கத்தினால் உருவானது.

பேனாவைத் திறக்காமலேயே இங்க்கின் அளவு அறியலாம். லிமிடெட் எடிஷனாக, தயாரிக்கப்பட்டுள்ளவை 80 பேனாக்கள்தான். இதன் விலை 29 லட்சத்து 34 ஆயிரத்து 311 ரூபாய்.

1 More update

Next Story