கார்மின் ஸ்மார்ட் கடிகாரம்


கார்மின் ஸ்மார்ட் கடிகாரம்
x

கார்மின் நிறுவனம் போர்ரன்னர் என்ற பெயரில் இரண்டு மாடல் ஸ்மார்ட் கடிகாரங்களை அறிமுகம் செய்துள்ளது.

ஓட்டப் பந்தய வீரர்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 1.3 அங்குல முழுமையான வண்ண தொடு திரையைக் கொண்டது. இதில் கொரில்லா கிளாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் ஒரு மாடல் (போர்ரன்னல் 955) சூரிய மின்னாற்றலில் ஓடும் திறன் கொண்டது. இதில் உள்ள பேட்டரி 15 நாட்கள் வரை செயல்படும் திறன் கொண்டது. புளூடூத், ஏ.என்.டி. பிளஸ், வை-பை இணைப்பு வசதி, நீர், தூசு புகாத தன்மை கொண்டது. 32 ஜி.பி. நினைவகம் உள்ளது. இதன் எடை 52 கிராம். இதில் கார்மின் போர்ரன்னர் மாடல் (சூரிய ஆற்றலில் இயங்குவது) விலை சுமார் ரூ.63,990. போர்ரன்னர் 255 எஸ் மாடல் விலை சுமார் ரூ.53,490.

1 More update

Next Story