கிஸ்பிட் ஸ்மார்ட் கடிகாரம்


கிஸ்பிட் ஸ்மார்ட் கடிகாரம்
x

கிஸ்மோர் நிறுவனம் புதிதாக கிஸ்பிட் பிளாஸ்மா என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.

இது 1.9 அங்குல அல்ட்ரா ஹெச்.டி. திரையைக் கொண்டது. புளூடூத் வி 5 இணைப்பு கொண்டது. தனிப்பட்ட முறையில் இதை லாக் செய்யும் வசதி மற்றும் திரையை இரண்டாக பிரிக்கும் வசதி கொண்டது. குரல் வழி கட்டுப்பாடு மூலம் செயல்படும்.

உடலின் வெப்ப நிலை, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, இதய துடிப்பு, எரிக்கப்பட்ட கலோரி அளவு, மகளிரின் மாதவிடாய் சுழற்சி அறிவுறுத்தல், தூக்கக் குறைபாடு உள்ளிட்டவற்றை துல்லியமாக உணர்த்தும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை செயல்படும். மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் வசதி கொண்டது. இதன் எடை 45 கிராம் மட்டுமே. கருப்பு, நீலம், கரும் சிவப்பு உள்ளிட்ட நிறங்களில் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.1,999.


Next Story