திங்கள் பற்றிய `கின்னஸ்' சுவாரசியம்


திங்கள் பற்றிய `கின்னஸ் சுவாரசியம்
x

திங்கட்கிழமையை ‘வாரத்தின் மிக மோசமான நாள்’’ என்று கின்னஸ் சாதனை அமைப்பு அதிகாரப்பூர்வமாக குறிப்பிட்டுள்ளது.

இதுவரை எவரும் செய்யாத சாதனையை செய்பவர்கள் அல்லது முந்தைய சாதனைகளை முறியடிப்பவர்களை கின்னஸ் சாதனை அமைப்பு அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி வருகிறது. உலகம் முழுவதும் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்படுவது, பழைய சாதனைகள் தகர்க்கப்பட்டு புதிய சாதனைகள் படைக்கப்படும் நிகழ்வை கண்காணிப்பது என அந்த அமைப்பு சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும்.

எல்லா நாட்களும் சாதனைகள் நிகழ்த்தப்படும் நிலையில் ஒரு நாளில் மட்டும் சாதனை சதவீதம் குறைந்து கொண்டிருக்கிறது. அந்த நாளும் கின்னஸ் சாதனை படைத்து இருக்கிறது. அந்த நாள் வேறு எதுவும் அல்ல... திங்கட்கிழமைதான்.

பொதுவாக திங்கட்கிழமை, அந்த வாரத்தை உற்சாகத்துடன் தொடங்க வைக்கும் நாளாக கருதப்படுகிறது. ஆனால் வார இறுதி நாட்களை மகிழ்ச்சியுடன் கழித்துவிட்டு மீண்டும் பணி சூழலுக்கு திரும்பும் நாளாக அமைந்திருப்பதால் பலரும் அந்த நாளை மகிழ்ச்சியுடன் வரவேற்பதில்லை.

அந்த நாளில் மந்தமாகவோ, சோம்பலாக இருப்பதாகவோ உணர்கிறார்கள். வார இறுதி நாட்களுக்கு பிறகு திங்கட்கிழமை வேலை செய்வது சலிப்பாக இருக்கும் என்பதால் அந்த நாளை 'வாரத்தின் மிக மோசமான நாள்'' என்று கின்னஸ் சாதனை அமைப்பு அதிகாரப்பூர்வமாக குறிப்பிட்டுள்ளது.

''நாங்கள் திங்கட்கிழமையை வாரத்தின் மோசமான நாளாக பதிவு செய்கிறோம்'' என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது. அதனை பல தரப்பினரும் ஆமோதித்துள்ளனர். பல்வேறு கருத்துக்களையும் பதிவு செய்துள்ளனர். பெரும்பாலானவர்களின் கருத்து என்ன தெரியுமா?

திங்கட்கிழமையை வாரத்தின் மிக மோசமான நாளாக அறிவிக்க கின்னஸ் அமைப்பு நீண்ட காலம் எடுத்துள்ளது என்பதுதான்.


Next Story