ஹிடாச்சி ஹெச் சீரிஸ் ஏர் கண்டிஷனர்


ஹிடாச்சி ஹெச் சீரிஸ் ஏர் கண்டிஷனர்
x

எதிர்வரும் கோடை காலத்தை கருத்தில் கொண்டு ஹிடாச்சி நிறுவனம் ஹெச் சீரிஸில் புதிய ரக ஏர்கண்டிஷனரை அறிமுகம் செய்துள்ளது.

இது ஐஸ் உறையும் நிலை தவிர்க்கப்படும் தொழில் நுட்பம் உடையது. தூசிகள், பாக்டீரியா, வைரஸ் உள்ளிட்டவற்றை வடிகட்டிவிடும். 15 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்கும் திறன் கொண்டது.

இதில் இன்வெர்டர் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அழகிய விளக்கொளி மூலமே எத்தனை டிகிரி குளிர்ச்சியில் ஏர்கண்டிஷனர் இயங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். நீல நிறம் (16 டிகிரி முதல் 23 டிகிரி வரை), பச்சை நிறம் (24 டிகிரி முதல் 27 டிகிரி வரை, கதகதப்பான சூழல் 28 டிகிரி முதல் 32 டிகிரி வரை) ஸ்மார்ட்போன் மூலமும் இதை செயல்படுத்த முடியும். குரல் வழிக்கட்டுப் பாட்டிலும் செயல்படும். 1 டன், 1.5 டன் மற்றும் 2 டன் அளவுகளில் இது வந்துள்ளது.

இதன் விலை சுமார் ரூ.27,900 முதல் ஆரம்பமாகிறது.

1 More update

Next Story