டர்போ என்ஜினில் அல்கஸார் அறிமுகம்


டர்போ என்ஜினில் அல்கஸார் அறிமுகம்
x

ஹூண்டாய் கார் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகங்களில் அல்கஸார் மாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த மாடலில் தற்போது டர்போ என்ஜின் பெட்ரோல் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது 1.5 லிட்டர் என்ஜினையும் டி.சி.டி. கியர் பாக்ஸையும் கொண்டது. இது எரிபொருள் சிக்கனமானது. சோதனை ஓட்டத்தின்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 18 கி.மீ. தூரம் ஓடியதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. டர்போ பெட்ரோல் மாடல் 160 ஹெச்.பி. திறனையும் 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை யையும் வெளிப்படுத்தக் கூடியது.

இதில் உள்ள அனைத்து மாடல் களும் 6 ஏர் பேக்குகளைக் கொண்டிருப்பதால் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதாக உள்ளது. இதன் என்ஜின், ஆர்.டி.இ. வசதி கொண்டது. இதனால் சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பான எத்தனால் கலந்த பெட்ரோலை இதில் பயன்படுத்த முடியும். 6 மேனுவல் கியர் மற்றும் 7 ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்டதாக இது வந்துள்ளது. தேவையானதை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

இதன் முன்புறம் புதிய வடிவமைப்பிலான கிரில் இடம் பெற்றுள்ளது. பிரீமியம் மாடலில் முகப்பு விளக்குகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் என்ஜின் கொண்ட இந்த எஸ்.யு.வி. சந்தையில் மிகவும் வலுவான இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதன் விலை சுமார் ரூ.16.10 லட்சம்.


Next Story