'இந்திய கிரிக்கெட் அணியின் 360' சூர்யகுமார் யாதவின் வாழ்க்கையை புரட்டிப்போட்டவர்..!


இந்திய கிரிக்கெட்  அணியின் 360 சூர்யகுமார் யாதவின் வாழ்க்கையை புரட்டிப்போட்டவர்..!
x

‘இந்திய அணியின் 360’ என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவின் வாழ்க்கை, ஏற்றமும் இறக்கமும் நிறைந்தது. அவருடைய வாழ்க்கையை புரட்டிப்போட்டவர், அவரது மனைவி தேவிஷா ஷெட்டி. ஏன்? எப்படி? என தெரிந்து கொள்வோமா..?

* சூர்யகுமார் யாதவ், 2016-ம் ஆண்டு அவருடைய நீண்ட நாள் காதலியான தேவிஷா ஷெட்டியை திருமணம் செய்து கொண்டார்.

* இவர்கள் இருவரும், ஒரே கல்லூரியில் பயின்றவர்கள்.

* சூர்யகுமாரின் மனைவி தேவிஷா ஷெட்டி, கிளாசிக்கல் டான்சர்.

* இருவருமே, செல்லப்பிராணிகள் மீது அதீத அன்பு காட்டுபவர்கள். வீட்டில் இரண்டிற்கும் மேற்பட்ட புல் டாக் வகை நாய்களை வளர்க்கிறார்கள்.

* தன்னுடைய மனைவி தேவிஷாவை, சூர்யகுமார் யாதவ் அதிர்ஷ்ட தேவதையாகவே பார்க்கிறார். தன்னுடைய வாழ்க்கையை புரட்டிப்போட்டவர் எனவும் வர்ணிக்கிறார். ஏனெனில், திருமணத்திற்கு பிறகுதான் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நிகழ்ந்தது என பலமுறை அவரே கூறியிருக்கிறார். இவர் கூறுவதுபோலவே, 2016-ம் ஆண்டிற்கு பிறகுதான் சூர்யகுமார் யாதவின் திறமைகள் வெளி உலகிற்கு தெரியவந்தன.

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க, சூர்யாவின் உடல் பருமன் தடையாக இருந்தபோது, தேவிஷா ஷெட்டியின் ஆலோசனைப்படிதான் பிரத்யேக உணவு பழக்கத்தை கடைப்பிடித்தார். அந்த பழக்கம் இன்று வரை தொடர்கிறது.

1 More update

Next Story