ஜீப் மெரிடியன் அறிமுகம்


ஜீப் மெரிடியன் அறிமுகம்
x

எஸ்.யு.வி. மாடல் தயாரிப்பில் முன்னோ டியாகத் திகழும் ஜீப் நிறுவனம் புதிதாக மெரிடியன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இது 2 லிட்டர் டீசல் என்ஜினைக் கொண்டது. 170 ஹெச்.பி. திறன் மற்றும் 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். அனைத்து சக்கர சுழற்சி கொண்டதாக வந்துள்ளது. மேனுவல் மாடலில் 6 கியர்களும், ஆட்டோமேடிக் மாடலில் 9 கியர்களும் கொண்ட தாக இது வந்துள்ளது.

இந்நிறுவனத்தின் கிராண்ட் செரோக்கீ மற்றும் கிராண்ட் வாகோனீர் உள்ளிட்ட மாடல்களின் கலவையாக இது வந்துள்ளது. இது 4,769 மி.மீ. நீளம், 1,859 மி.மீ. அகலம், 1,682 மி.மீ. உயரம் கொண்டது. இது வழக்கமான ஜீப் கம்பாஸ் மாடலை விட பெரியது. உள்பகுதியில் 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. இது தவிர 10.2 அங்குல தொடு திரை உள்ளது.

வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இயங்குதளத்தில் செயல்படக் கூடியது. வயர்லெஸ் சார்ஜிங் வசதி, இரண்டு அடுக்கு கிளைமேட் கண்ட்ரோல் வசதி, திறந்து மூடும் வகையிலான மேற்கூரை உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்களாகும். பார்க்கிங் சென்சார், ஏ.டி.ஏ.எஸ். செயல்பாடு உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது. 7 பேர் பயணிக்கும் வகையில் இடவசதி கொண்டதாக வந்துள்ளது. விரைவிலேயே 6 பேர் பயணிக்கும் வகையிலான மாடலை அறிமுகப்படுத்தப் போவதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.


Next Story