ஜே.பி.எல். வயர்லெஸ் இயர்போன்

ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் ஜே.பி.எல். நிறுவனம் புதிதாக வேவ் மற்றும் பீம் என்ற பெயரில் இரண்டு மாடல் வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய் துள்ளது.
காதுகளில் கச்சி தமாக பொருந்தும் வகையிலான வடிவமைப்பு கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 32 மணி நேரம் செயல்படும். 10 நிமிடம் சார்ஜ் செய்தாலே 2 மணி நேரம் செயல்படும் திறன் கொண்டது.
இதில் ஸ்மார்ட் ஆம்பியன்ட் தொழில்நுட்பம் பயன் படுத்தப்பட்டுள்ளது. இது துல்லியமான இசையை வழங்கக்கூடியது. மேலும் இதில் உள்ள வாய்ஸ் அவேர் என்ற நுட்பம் மூலம் ஸ்மார்ட்போனில் நீங்கள் பேசுவது மறுமுனையில் உள்ள வருக்கு எவ்விதம் கேட்கும் என்று நீங்கள் உணரலாம். உங்கள் குரலை நீங்கள் கேட்கும் வசதி உள்ளது. ஜே.பி.எல். செயலி மூலம் நாள் முழுவதும் இனிய இசையைக் கேட்டு மகிழ முடியும். வேவ் மாடல் விலை சுமார் ரூ.3,999. பீம் மாடலின் விலை சுமார் ரூ.4,999.
Related Tags :
Next Story






