லாவா எக்ஸ் 3 ஸ்மார்ட்போன்


லாவா எக்ஸ் 3 ஸ்மார்ட்போன்
x

லாவா நிறுவனம் எக்ஸ் 3 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 6.5 அங்குல திரையைக் கொண்டுள்ளது.

இதில் குவாட்கோர் மீடியா டெக் ஹீலியோ பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதை மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் 512 ஜி.பி. வரை விரிவாக்கம் செய்ய முடியும். ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் இயங்குதளம் உடையது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது.

பின்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 5 மெகா பிக்ஸெல் கேமராவும் உடையது. பின்புறம் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. நீண்ட நேரம் செயல்பட 4 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 10 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.6,999. நீலம், கருப்பு உள்ளிட்ட நிறங்களில் வந்துள்ளது.


Next Story