நூலகம்: அறிவுக் கருவூலம்


நூலகம்: அறிவுக் கருவூலம்
x

உலகின் பல பகுதிகளில் இருக்கும் அறிவுக் கருவூலங்களான நூலகங்கள் பற்றிய சில அரிய தகவல்கள்...

* பண்டைய காலங்களில் நம் நாட்டில் கந்தாபுரி என்ற இடத்தில் மிகப் பெரிய நூலகம் இருந்ததாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

* பழங்கால இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகத்தில் ஏராளமான அரிய புத்தகங்களுடன் இருந்த நூலகத்தை, 'முத்துக்கள் நிறைந்த கடல்' என்று உலகமே வியந்து பாராட்டுகிறது.

* பிரிட்டிஷ் ஆட்சியின்போது தொடங்கப்பட்ட இந்திய தேசிய நூலகம் கொல்கத்தாவில் உள்ளது. இந்த நூலகத்தில் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வெளியான புத்தகங்கள் பல உள்ளன. இதே போல மற்றொரு இந்திய நூலகமும் புகழ்பெற்றது. அது, நம் சென்னையின் கன்னிமாரா நூலகம்!

* தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் சரபோஜி அங்கு சரஸ்வதி மகால் நூலகத்தை அமைத்தார். இங்கு ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகளும், அரிய பழைய நூல்களும் பராமரிக்கப்படுகின்றன.

இதைத் தவிர உக்ரைனில் உள்ள நேஷனல் சயின்டிபிக் லைப்ரரி, லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகம், மாஸ்கோவில் உள்ள இன்ஸ்டிடியூட் யுனிவர் சிட்டி நூலகம் மற்றும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பப்ளிக் லைப்ரரி போன்றவையும் பல லட்சம் நூல்களுடன் புகழ்பெற்று விளங்குகின்றன.

உலகின் பிரமாண்டமான சில நூலகங்கள் இவை...

1) வாஷிங்டனில் உள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ். இதில் 3 கோடியே 20 லட்சம் புத்தகங்கள் உள்ளன.

2) பெய்ஜிங்கில் உள்ள நேஷனல் லைப்ரரி ஆப் சீனா. இங்கு சுமார் 2 கோடியே 30 லட்சம் நூல்கள் உள்ளன.

3) செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இயங்கும் லைப்ரரி ஆப் ரஷியன் அகடமி ஆப் சைன்ஸ்

4) நேஷனல் லைப்ரரி ஆப் கனடா

5) ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் இயங்கும் டாயிட்சு பிப்லோதிக் லைப்ரரி


Next Story