மஹிந்திரா எக்ஸ்.யு.வி 400 இ.வி.


மஹிந்திரா எக்ஸ்.யு.வி 400 இ.வி.
x

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்.யு.வி. வரிசையில் 400 இ.வி. என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.15.99 லட்சம். கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்த மாடல் காட்சிப்படுத்தப்பட்டது. மஹிந்திரா நிறுவனம் பேட்டரி கார் தயாரிப்பில் ஈடுபட்டு அறிமுகம் செய்துள்ள முதலாவது மாடல் இதுவாகும். காருக்கான முன்பதிவு குடியரசு தினமான 26-ந் தேதி தொடங்குகிறது.

இந்தக் காரில் 39.4 கிலோவாட் அவர் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் மூன்று விதமான ஓட்டும் நிலைகள் உள்ளன. இதில் உள்ள மின் மோட்டார் 150 ஹெச்.பி. திறனையும் 310 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். இந்தக் காரை ஸ்டார்ட் செய்து 8.3 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிடலாம்.

இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 150 கி.மீ. இதில் உள்ள பேட்டரி முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்டால் அதன் மூலம் 375 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம். உள்பகுதி யில் 7 அங்குல தொடு திரை, திறந்து மூடும் வகையிலான மேற்கூரை உள்ளது. பாதுகாப்பு அம்சமாக இதில் 6 ஏர் பேக்குகள் உள்ளன. குழந்தைகள் பயணிப்பதற்கேற்ப ஐசோபிக்ஸ் வசதியும் இடம் பெற்றுள்ளது.


Next Story