மெர்சிடெஸ் ஏ.எம்.ஜி. இ 53


மெர்சிடெஸ் ஏ.எம்.ஜி. இ 53
x

புத்தாண்டில் முதல் வரவாக மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனம் ஏ.எம்.ஜி. இ 53 எனும் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1.30 கோடி. இதில் 3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உள்ளது. இதனால் இதை ஸ்டார்ட் செய்து 4.6 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கி.மீ. இ 53 கேப்ரியோலெட் என்ற இந்த மாடல் 2 கதவு களைக் கொண்ட 4 பேர் பயணிக்கும் கன்வெர்டபிள் மாடலாகும்.

இது 435 ஹெச்.பி. திறன் மற்றும் 520 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடிய டர்போ சார்ஜ்டு என்ஜின் உள்ளது. இதில் 9 ஆட்டோமேடிக் கியர்கள், 19 அங்குல அலாய் சக்கரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 5 கண்கவர் வண்ணங்களில் இது கிடைக்கும்.

இதன் மேல்கூரை உறுதியான கேன்வாஸால் ஆனது. இதில் இரண்டு திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்போ டெயின்மென்ட் சிஸ்டம் திரை உள்ளன. ஓட்டுநருக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் கிளஸ்டர் அளிக்கும்.

முன் இருக்கைப் பயணிகளுக்கு கழுத்துப் பகுதியில் சூடான காற்று அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இது கழுத்து வலிக்கு இதமாக இருக்கும். இதில் ஏர் கேப் சிஸ்டம் உள்ளது. இதனால் கார் அதிக வேகத்தில் செல்லும்போது காற்று இரைச்சல் பயணிக்கு கேட்காது.

பந்தய மைதானத்தில் காரை செலுத்தும்போது அதற்கேற்ப தேவையான தகவல்களை இது உடனடியாக வழங்கும். அனைத்துக்கும் மேலாக 64 விதமான கண்ணுக்கு குளிர்ச்சி தரும் வண்ண விளக்குகள் உள்ளே நிலவுகிறது. தேவையானதை தேர்வு செய்து கொள்ளலாம். பர்மெஸ்டர் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் இனிய இசையை வழங்கும்.


Next Story