மோட்டோ இ 32 எஸ்


மோட்டோ இ 32 எஸ்
x

மோட்டோரோலா நிறுவனம் புதிதாக இ 32 எஸ் என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இதன் விலை சுமார் ரூ.9,299. இது 6.5 அங்குல ஹெச்.டி. எல்.சி.டி. திரையைக் கொண்டுள்ளது. இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி 37 எஸ்.ஓ.சி. பிராசஸர் பயன்படுத்தப் பட்டுள்ளது.

இதில் 3 ஜி.பி. மற்றும் 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மற்றும் 64 ஜி.பி. நினைவகம் உள்ளது. நினைவகத் திறனை 1 டி.பி. வரை எஸ்.டி. கார்டு பயன்படுத்தி விரிவாக்கம் செய்ய முடியும். இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. பின்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது.

புளூடூத் 5 இணைப்பு வசதி கொண்டது. யு.எஸ்.பி. டைப் சி போர்ட் உள்ளது. 15 வாட் சார்ஜருடன் 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரியைக் கொண்டதாக இது வந்துள்ளது.


Next Story