மோட்டோ ஜி 82 ஸ்மார்ட்போன்


மோட்டோ ஜி 82 ஸ்மார்ட்போன்
x

மோட்டோரோலா நிறுவனம் புதிதாக ஜி 82 ரக ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.

இதில் 6.6 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் போலெட் திரை, ஸ்நாப்டிராகன் 695 எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது. இதன் பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 6 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. ரேம்களைக் கொண்டதாகவும், 128 ஜி.பி. நினைவகம் உடையதாகவும் இது வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் நினைவகத் திறனை மைக்ரோ எஸ்.டி. கார்டு பயன்படுத்துவதன் மூலம் 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்ய முடியும். இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது.

இதில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமராவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 30 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. கிரே மற்றும் வெள்ளை நிறத்தில் கிடைக்கும்.

6 ஜி.பி. ரேம் உள்ள மாடல் விலை சுமார் ரூ.21,499. 8 ஜி.பி. ரேம் மாடல் விலை சுமார் ரூ.22,999.


Next Story