அமெரிக்கா - ரஷியா இடையே அணு ஆயுதப்போர் ஏற்பட்டால் 500 கோடி மக்கள் உயிரிழப்பார்கள் - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு!


அமெரிக்கா - ரஷியா இடையே அணு ஆயுதப்போர் ஏற்பட்டால் 500 கோடி மக்கள் உயிரிழப்பார்கள் - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு!
x

அமெரிக்காவிற்கும் ரஷியாவிற்கும் இடையே முழு அளவிலான அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் உலகளாவிய பஞ்சத்திற்கு வழிவகுக்கும்.

வாஷிங்டன்,

அமெரிக்கா - ரஷியா இடையே அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் 500 கோடி மக்கள் உயிரிழப்பார்கள் என்று அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆறு வெவ்வேறு அணுசக்தி யுத்த சூழ்நிலைகளின் விளைவுகளை ஆய்வு செய்தனர்.

இது தொடர்பாக, நேச்சர் புட் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, அமெரிக்காவிற்கும் ரஷியாவிற்கும் இடையே ஒரு முழு அளவிலான மோதல் நடந்தால், மனிதகுலத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்களை அழித்துவிடும் என்று அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவிற்கும் ரஷியாவிற்கும் இடையிலான முழு அளவிலான அணு ஆயுதப் போருக்கு ஏற்பட்டால் உலகளாவிய பஞ்சத்திற்கு வழிவகுக்கும். அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் போது இரு நாடுகளுக்கு இடையே ஒரு சிறிய மோதல் கூட உலகளாவிய பஞ்சத்திற்கு வழிவகுக்கும்.

இதன்மூலம் 5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பட்டினியால் இறப்பார்கள் என்று ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூறியது.

அணுசக்தி போர், காலநிலை மாற்றத்தில் இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வெப்பத்தால் ஓசோன் படலம் அழிந்துவிடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

"இந்த தரவு நமக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறது: அணுசக்தி யுத்தம் நடக்காமல் தடுக்க வேண்டும்" என்று ஆய்வு குழு பேராசிரியர் ஆலன் ரோபக் தெரிவித்தார்.


Next Story