மர சிற்ப கலைஞர்


மர சிற்ப கலைஞர்
x

மாற்றுத்திறனாளிகள் தங்களிடம் இருக்கும் தனித்திறன்களை நிரூபிப்பதோடு, அதனை தங்கள் வாழ்வாதாரத்திற்கான வாய்ப்பாகவும் பயன் படுத்திக்கொள்கிறார்கள்.

மாற்றுத்திறனாளிகள் தங்களிடம் இருக்கும் தனித்திறன்களை நிரூபிப்பதோடு, அதனை தங்கள் வாழ்வாதாரத்திற்கான வாய்ப்பாகவும் பயன் படுத்திக்கொள்கிறார்கள். அதன் மூலம் மற்றவர்களை சார்ந்திருக்காமல் சுயமாக தங்களை நிலை நிறுத்திக்கொள்ளும் மன வலிமையையும் பெற்றுவிடுகிறார்கள்.

தங்களை போன்ற நிலையில் இருப்பவர்களுக்கு ரோல்மாடலாகவும், வழிகாட்டியாகவும் விளங்குகிறார்கள். அப்படிப்பட்டவர் களுள் ஒருவர், முகமது யூசப் முரன்.

இவர் காது கேளாமை மற்றும் வாய் பேச முடியாமை போன்ற பாதிப்புக்கு ஆளானவர். சிறு வயது முதலே கைவினை கலை மீது ஈடுபாடு கொண்டவர், 15 வயதில் மரங்களை செதுக்கி சிற்பம் வடிக்கும் கலையை முழுமையாக கற்றுத் தேர்ந்துவிட்டார்.

காஷ்மீரின் ஈக்தா பகுதியை சேர்ந்த இவர், இந்த பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கும் ஒரே மாற்றுத்திறனாளி கைவினை கலைஞர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். இவரது கைவண்ணத்தில் உருவான மர சிற்பங்கள் காண்போரை வியப்பில் ஆழ்த்தும் கலை நுணுக்கங்களுடன் மிளிர்கின்றன.


மனிதர்கள் மற்றும் கடவுள் உருவங்கள் முதல் அலங்கார பொருட்கள் வரை மாறுபட்ட கலைப் படைப்புகளை உருவாக்கி வருகிறார். இவரது கலைப் படைப்புகள் பலருடைய பாராட்டை பெற்றுள்ளன. பலரும் ஆர்வமாக வாங்கிச் செல்கிறார்கள்.

தனது கலைத் திறமை பல ஆண்டுகளாக வெளி உலகிற்கு தெரியவந்திருந்தாலும் அரசு ரீதியாக உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வேதனையோடு சொல்கிறார்.


Next Story