உயரும் கச்சா எண்ணெய் விலை! 1 பீப்பாய் விலை எவ்வளவு தெரியுமா?


உயரும் கச்சா எண்ணெய் விலை! 1 பீப்பாய் விலை எவ்வளவு தெரியுமா?
x

கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 52 சதவீதம் அதிகரித்து உள்ளது.

2022 ஜனவரி 1 ஆம் தேதி பீப்பாய் ஒன்றுக்கு 78 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை தற்போது ஜூன் 17-2022 ல் 119 டாலராக 52 சதவீதம் அதிகரித்து உள்ளது.

ஆனால் பெட்ரோல் விலை ஜனவரியில் 101 ரூபாயாக இருந்து மே மாதத்தில் 110 ரூபாய் வரை உயர்ந்து வரி குறைப்பினால் தற்போது 102 ரூபாயாக உள்ளது. டீசல் விலை ஜனவரியில் 91 ரூபாயாக இருந்து மே மாதத்தில் 101 ரூபாய் வரை உயர்ந்து வரி குறைப்பினால் தற்போது 94 ரூபாயாக உள்ளது.

தற்போது பொதுத்துறை நிறுவனங்களான ஐஓசி, எச்பிசிஎல், பிபிசிஎல் ஆகியவை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 8.80 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 12.80 ரூபாயும் நஷ்டமடைவதாக கணக்கிடப்பட்டு உள்ளது.

சமையல் எரிவாயு விற்பனையில் சிலிண்டர் ஒன்றுக்கு 175 ரூபாய் நஷ்டமடைவதாக கணக்கிடப்பட்டுள்ளது. செப்டம்பரில் முடிவடையும் காலாண்டில் இந்த மூன்று நிறுவனங்களின் மொத்த நஷ்டம் 80 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை நஷ்டம் ஏற்படாதவாறு அதிகரித்து, அத்துடன், அவற்றின் மீதான வரியை அதே அளவிற்கு குறைத்தால் மட்டுமே பெட்ரோலிய நிறுவனங்கள் நஷ்டமடைவதை தடுக்க முடியும் என்று பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

1 More update

Next Story