ரிவர் இண்டீ பேட்டரி ஸ்கூட்டர்


ரிவர் இண்டீ பேட்டரி ஸ்கூட்டர்
x

பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவன மான ரிவர் தற்போது இண்டீ என்ற பெயரில் பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1.25 லட்சம். அதிக அளவில் பொருட்களை வைக்கும் இட வசதி கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீலம், சிவப்பு, மஞ்சள் உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் இது கிடைக்கும். 14 அங்குல சக்கரம், முன்புறம் கால்களை வைக்கும் இட வசதி, முன்புறம் பொருள் வைக்க பெட்டி உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது. இதில் 4 கிலோவாட் அவர் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கி.மீ. தூரம் ஓடக் கூடியது.

இது 26 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக்கூடியது. இதை ஸ்டார்ட் செய்து 3.9 விநாடிகளில் 40 கி.மீ. வேகத்தை எட்டிவிட முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கி.மீ. ஆகும். 770 மி.மீ. உயர இருக்கை, 14 அங்குல சக்கரம் சவுகரியமான பயணத்தை உறுதி செய்கிறது. டெலஸ்கோப்பிக் போர்க் மற்றும் பின்புறம் இருபுற ஷாக்அப்சார்பர் உடையது. மூன்று விதமான ஓட்டும் (எகானமி, ரைட் மற்றும் ரஷ்) நிலைகளைக் கொண்டது. முன்புறம் மோதல் பாதுகாப்பு கவசம் (கிராஷ் கார்டு), யு.எஸ்.பி. சார்ஜிங் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது. எல்.இ.டி. முகப்பு விளக்கு வாகனத்துக்கு அழகிய தோற்றத்தை அளிக்கிறது.


Next Story