ஒவ்வொரு வருடமும் 30 மீட்டர் அளவுக்கு பெரிதாகிக் கொண்டிருக்கும் ராட்சஷ குழி! ரஷியாவில் வினோதம்


ஒவ்வொரு வருடமும் 30 மீட்டர் அளவுக்கு பெரிதாகிக் கொண்டிருக்கும் ராட்சஷ குழி! ரஷியாவில் வினோதம்
x

Image Credit : Twitter @AssaadRazzouk

ரஷியாவில் உள்ள சைபீரியாவில் தரையில் தோன்றிய மிகப்பெரிய குழி ஒன்று மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாஸ்கோ,

ஆர்க்டிக் வட்டத்தில் தொலைதூர தீபகற்பத்தில் தரையில் மிகப்பெரிய குழி ஒன்று நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே செல்கிறது.

இதனை 'நரகத்திற்கு செல்லும் வாய்' திறக்கப்பட்டுள்ளதாக ரஷியாவில் உள்ள கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.

ரஷியாவில் உள்ள சைபீரியாவில் தரையில் தோன்றிய மிகப்பெரிய குழி ஒன்று மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதி மக்கள் இந்த குழியை பூமிக்கு உள்ளே இருக்கும் இன்னொரு உலகத்திற்கான பாதை என்று கூறி வருகிறார்கள்.


ஒவ்வொரு வருடமும் இந்த குழியின் ஆழம் அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது. 1980ம் ஆண்டு இந்த குழி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டாலும், முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது இதன் ஆழம் 6 அடி கூட இல்லை. ஆனால் கடந்த வாரம் இந்த குழியை மீண்டும் அளந்து உள்ளனர். அப்போது குழியின் ஆழம் 282 அடி என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு குழியின் அகலம் 1 கிலோ மீட்டர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த குழி கடந்த 40 வருடங்களில் தினமும் பெரிதாகிக்கொண்டே சென்று தற்போது ராட்சச குழியாக உருவெடுத்துள்ளது. இதனால்தான் அப்பகுதி மக்கள் இந்த குழியை பூமிக்கு உள்ளே இருக்கும் இன்னொரு உலகத்திற்கான பாதை என்று கூறி வருகிறார்கள். இந்த குழியில் கீழே செல்ல செல்ல பூமியின் பழைய அடுக்குகள் தெரிய தொடங்கி உள்ளன. ஒவ்வொரு வருடமும் 20 முதல் 30 மீட்டர் அளவுக்கு பெரிதாகிக் கொண்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

அதன்படி பாதி தூரத்திலேயே 2 லட்சம் வருடம் பழைய பூமியின் மண் அடுக்குகள் இங்கு கண்டுடிபிடிக்கப்பட்டு இருக்கின்றன. முழு ஆழத்திற்கு சென்றால், அதாவது 282 அடிக்கு கீழே சென்றால் அங்கு இருக்கும் மண் அடுக்கு, 6.5 லட்சம் ஆண்டுகள் பழமையானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது பூமி 6.5 லட்சம் வருடத்திற்கு எப்படி இருந்தது, மண் எப்படி இருந்தது என்ற ரகசியத்தை தெரிவிக்கும் வகையில் இந்த குழி ஏற்பட்டுள்ளது.




ரஷியாவில் சமீப காலமாக பெர்மாபார்ஸ்ட் உருக தொடங்கி உள்ளன. அதாவது பல லட்சம் ஆண்டுகளாக உறைந்து இருக்கும் பூமியின் கீழ் பகுதி உருக தொடங்கி உள்ளது.

பெர்மாப்ரோஸ்ட் என்பது 0 °செல்சியஸ் குளிர் வெப்பநிலையில் தொடர்ந்து நிலத்தில் அல்லது கடலுக்கு அடியில் இருக்கும் பகுதியாகும். பல்வேறு வகையான மண், மணல் மற்றும் பாறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து வைத்திருக்கும் பனியில் இருந்து உருவாகிறது. அலாஸ்கா, கிரீன்லாந்து, கனடா மற்றும் சைபீரியாவின் கணிசமான பகுதிகள் பெர்மாப்ரோஸ்ட் பூமிக்கடியில் உள்ளது.

சைபீரியாவில் இதனால் பல இடங்களில் பெர்மாபார்ஸ்ட் மீது கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிய தொடங்கி உள்ளன. வெப்பநிலை அதிகரிப்பதால் இப்படி பெர்மாபார்ஸ்ட் உருகி அங்கு நீர் ஏற்படுகிறது.

சைபீரியாவில் பல இடங்களில் இப்படி அடிக்கடி பல இடங்களில் ஐஸ் உருகி புதிய ஆறுகள் ஏற்படுகின்றன. இதனால் மற்ற இடங்களில் இருக்கும் பகுதிகளில் குழி ஏற்படுகிறது. அதன் விளைவாகவே ரஷியாவில் இந்த பெரிய குழி ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உலகம் முழுக்க வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் பலவிதமான பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே தற்போது ரஷியாவில் பெரிய குழி ஏற்பட்டுள்ளது.


Next Story