மழை வந்தால் தங்குமிடம் இலவசம்!


மழை வந்தால் தங்குமிடம் இலவசம்!
x

இத்தாலியின் டஸ்கனி மாகாணத்தில் உள்ள எல்பா தீவுக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளுக்கு மழை பெய்தால் தங்குவதற்கான கட்டணமே செலுத்த வேண்டியதில்லை.

உலகின் அழகான தீவுகளில் ஒன்று எல்பா. இத்தாலியின் டஸ்கனி மாகாணத்தில் உள்ள இந்த தீவுக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்கிறது. காரணம், அடிக்கடி பெய்கின்ற சிறு மழை. தீவைச் சுற்றிப்பார்க்க வந்தவர்கள் மழையின் காரணமாக ஓட்டலிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை. ஏமாற்றமடையும் அவர்கள் எல்பாவிற்கு மறுபடியும் வருவதில்லை. இதனால் ஓட்டல் நடத்துபவர்களுக்கு நஷ்டம். இந்நிலையில் எல்பாவில் உள்ள ஓட்டல்கள் ஒரு அறிவிப்பைத் தந்திருக்கின்றன.

''தொடர்ந்து இரண்டு மணி நேரம் மழைபெய்தால் ஒரு நாள் இரவு தங்குவதற்காக நீங்கள் செலுத்திய கட்டணம் திரும்பத் தரப்படும். இரண்டு மணி நேரத்துக்கு மேல் மழை பெய்தால் தங்குவதற்கான கட்டணமே செலுத்த வேண்டியதில்லை.

எவ்வளவு நாள் வேண்டுமானாலும் இலவசமாகத் தங்கிக் கொள்ளலாம். காலை 10 மணி முதல் இரவு 8 மணிக்குள் பெய்யும் மழைக்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும்...'' என்பது அந்த அறிவிப்பு.

எல்பாவில் தொடர்ந்து இரண்டு மணி நேரம் மழை பெய்து ஐந்து வருடங்களாகிவிட்டது.


Next Story