மத்ரியோஷ்கா: பொம்மைக்குள் பொம்மை


மத்ரியோஷ்கா: பொம்மைக்குள் பொம்மை
x

ஆறு பொம்மைகளைத் தன் வயிற்றுக்குள் வைத்திருக்கும் ஏழாவது பெரிய பொம்மைதான் மத்ரியோஷ்கா.

ஒரு பொம்மை. அதன் வயிற்றுப் பகுதியைத் திறந்தால் இன்னொரு பொம்மை. அந்தப் பொம்மையைத் திறந்தால் இன்னொரு குட்டி பொம்மை. இப்படி ஆறு பொம்மைகளைத் தன் வயிற்றுக்குள் வைத்திருக்கும் ஏழாவது பெரிய பொம்மைதான் மத்ரியோஷ்கா. 'அன்னை' என்ற அர்த்தம் வரும் லத்தீன் வார்த்தையான மேட்ரனிலிருந்து திரிந்து இந்தப் பெயர் வந்துள்ளது. ரஷியாவை பூர்வீகமாகக் கொண்ட உலகெங்கும் புகழ்பெற்ற பொம்மை இது.

வெங்காயத்தின் மேல்தோலைப் பிரித்தால் இன்னொரு வெங்காயம். இன்னொரு தோலைப் பிரித்தால் இன்னொரு வெங்காயம். உரிப்பதும் வெங்காயம், கிடைப்பதும் வெங்காயம். அதைப் போலத்தான் மத்ரியோஷ்காவுக்குள் அதே வடிவில் சின்னப் பொம்மைகள் திறந்து கொண்டேயிருக்கின்றன.

பெட்ரோவிச், மமோன்தவ் இருவரும் சேர்ந்து 1892-ல் வடிவமைத்த பொம்மை இது. குண்டான இளம் கிராமத்து ரஷியப் பெண்ணின் சாயலில் முதல் பொம்மையை உருவாக்கினார்கள். பின்னர் மத்ரியோஷ்காவுக்கு பாரம்பரிய ரஷிய உடையான சராஃபனை அணிவித்து அழகு பார்த்தார்கள்.

1900-வது ஆண்டில் பிரான்சின் தலைநகர் பாரீசில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சியில்தான் மத்ரியோஷ்கா பொம்மை உலகமெங்கும் ரசிகர்களை பெற்றது. வெவ்வேறு நாடுகள், கலாசாரங்களை சேர்ந்தவர்கள் தங்களைக் கவர்ந்த கதைகளின் தாக்கத்தில் மத்ரியோஷ்கா பொம்மைகளை உருவாக்க ஆரம்பித்தனர். தற்போது சர்வதேச தலைவர்களின் உருவத்தில்கூட மத்ரியோஷ்கா பொம்மைகள் கிடைக்கின்றன.

1 More update

Next Story