நேபாளத்தில் அடிக்கடி விமான விபத்து நடப்பது ஏன்..?


நேபாளத்தில் அடிக்கடி விமான விபத்து நடப்பது ஏன்..?
x

நேபாளம் மலைகள் சூழப்பட்ட தேசம். அங்கு பனிமூட்டமான வானிலையே அதிகம் நிலவும். மலைப்பிரதேசம் என்பதால், ஓரளவிற்குச் சமதளமான பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அதில்தான் ஓடுதளமும், விமான நிலையமும் அமைத்திருக்கிறார்கள்.

எல்லா நாடுகளிலுமே விமான விபத்துகள் நடப்பது சகஜம்தான். ஆனால் நேபாளத்தில் மட்டும் விமான விபத்துகள் அடிக்கடி நடப்பது கவனிக்கத்தக்கது. கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் 22 பேருடன் சென்ற தாரா ஏர் நிறுவனத்தின் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் பலியானார்கள். சமீபத்தில், நடந்த விமான விபத்தில், 60-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். விமானப் பாதுகாப்புத் தரவுத்தளம் அளிக்கும் தகவலின்படி, கடந்த 30 ஆண்டுகளில் 27 பயங்கரமான விமான விபத்துகள் நேபாளத்தில் நடந்துள்ளன என்று தெரியவருகிறது.

இனியும் தொடருமோ...? என்ற அச்சம், நேபாளத்திற்குச் சுற்றுலா செல்ல ஆசைப்படுபவர்களின் மனதில் எழுவது சகஜம்தான் என்றாலும், அங்கு மட்டும் ஏன் அதிகளவில் விபத்துகள் நடைபெறுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா..?

நேபாளம் மலைகள் சூழப்பட்ட தேசம். அங்கு பனிமூட்டமான வானிலையே அதிகம் நிலவும். மலைப்பிரதேசம் என்பதால், ஓரளவிற்குச் சமதளமான பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அதில்தான் ஓடுதளமும், விமான நிலையமும் அமைத்திருக்கிறார்கள். இப்படி விமானம் தரை இறங்க, பறக்க வழிவகை செய்யும் விமான நிலையம் அமைப்பதிலேயே இவ்வளவு சிக்கல்கள் நிலவுகிறது என்றால், அதில் விமானத்தைத் தரை இறக்குவதில் அதிகம் சவால்கள் இருப்பது இயல்புதானே. அதுதான் நேபாளத்தில் அடிக்கடி விபத்தாக அரங்கேறுகிறது.

பனிமூட்டமான வானிலை, போதிய பயிற்சி இல்லாத விமானிகள் மற்றும் விமான உதவியாளர்கள், விமானம் இயக்குவதைக் கடினமாக்கும் மலைப்பகுதிகள், நவீனத் தொழில்நுட்பம் இல்லாத பழைய விமானங்கள், உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்புக் குறைபாடுகள் முந்தைய விமான விபத்துகளுக்குக் காரணமாக இருந்துள்ளன.

2013-ம் ஆண்டு ஐரோப்பிய யூனியன், பாதுகாப்புக் காரணங்களுக்காக நேபாள விமானங்களைத் தடை செய்தது. இதனால், ஐரோப்பிய வான் எல்லைக்குள் நேபாள விமானங்கள் நுழையவே முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.


Next Story