யு அண்ட் ஐ வயர்லெஸ் ஸ்பீக்கர்


யு அண்ட் ஐ வயர்லெஸ் ஸ்பீக்கர்
x

நுகர்வோர் மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் யு அண்ட் ஐ நிறுவனம் புதிதாக இரண்டு போர்ட்டபிள் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது.

வீட்டில் நடைபெறும் சிறிய நிகழ்ச்சிகளில் உபயோகிக்கும் வகையிலும், எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 30 வாட் திறனை வெளிப்படுத்தும். இதை முழுமையாக சார்ஜ் செய்தால் 6 மணி நேரம் தொடர்ந்து செயல்படும்.

இதில் வெளிப்படும் இசையின் தன்மைக்கேற்ப ஆர்.ஜி.பி. விளக்கு ஒளிரும். 6.5 அங்குல அளவிலான ஸ்பீக்கரைக் கொண்டது. இத்துடன் மைக்ரோபோனும் உள்ளதால் அறிவிப்புகளை செய்ய முடியும். இதன் விலை சுமார் ரூ.4,999.


Next Story