வெளிநாட்டவரை பயமுறுத்தும் '13'...!


வெளிநாட்டவரை பயமுறுத்தும் 13...!
x

வெளிநாட்டினரைப் பொறுத்தவரை ‘13’ ஒதுக்கப்பட வேண்டிய நம்பர். இயேசு சிலுவையில் அறைந்த தினம், சபிக்கப்பட்ட எண்... இப்படியாக, 13-ம் எண்ணை ஒதுக்க என்னென்னவோ காரணங்கள் கூறுகிறார்கள்.

நம்பர் 13 எப்படியெல்லாம் வெளிநாட்டினரை அல்லல் படுத்துகிறது என்று பாருங்களேன்..!

* ஸ்காட்லாந்து விமான நிலையத்தில் 13 என்ற எண்ணை பயன்படுத்துவதேயில்லை. மாறாக 12-க்குப் பிறகு 12-பி என்றுதான் பயன்படுத்துகிறார்கள்.

* லுப்தன்ஸா விமானத்தில் 13 என்ற இருக்கை கிடையாது. 12-க்குப் பிறகு 14தான்.

* அப்போலோ 13 விண்கலம் வெற்றிகரமாகச் செயல்படாமல் திரும்பியதற்கு, 13 என்ற எண்ணை சேர்த்ததுதான் காரணம் என்கிறார்கள் அமெரிக்கர்கள்.

* தொடர்ந்து 12 ஆண்டுகள் உலகின் முதல் பணக்காரராகக் கோலோச்சிய பில்கேட்ஸ், 13-வது வருடம் அந்த அந்தஸ்தை இழந்துவிட்டதற்கு, 13 என்றே எண்ணே காரணமாம்.

* அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் 13-ந் தேதி அன்று பிறந்தாலோ அல்லது இறந்தாலோ அந்த எண்ணை பதிவேட்டில் பயன்படுத்தாமல் 12-ஏ என்றே குறிப்பிடுகின்றனர்.

இப்படி 13-ம் எண்ணைப் பற்றி வெளிநாடுகளில் நிறைய தகவல்கள் உண்டு. என்னதான் அறிவியல் வளர்ச்சியடைந்தாலும், மக்களின் எண்ண ஓட்டம் மாறவேயில்லை.

பார்முலா ஒன் கார் ரேஸில் கலந்து கொள்ளும் கார்களுக்கு 13-ம் எண் வழங்கப்படுவதில்லை.


Next Story