உலக பெருங்கடல்கள் தினம்


உலக பெருங்கடல்கள் தினம்
x

இந்த பூமியின் 70 சதவீத நிலப்பரப்பை, அதாவது கிட்டத்தட்ட முக்கால் பாகம் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நீர்நிலையாக, கடல் விளங்குகிறது. மனிதர்கள், இந்த பூமியில் வாழ்வதற்கு கடல் பெரும் பங்காற்றுகிறது.

ஆக்சிஜன் என்னும் உயிரிவாயுவை அதிகமாக உற்பத்தி செய்து வழங்கும் கடல், முக்கியமான மருந்துகளின் மூலப்பொருட்களையும் நமக்கு வழங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் மக்கள், தங்களின் உணவுத் தேவைக்காக கடலை நம்பி இருக்கின்றனர். மனிதர் களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்யும் அதே வேளையில், பலரது வாழ்வாதாரமாகவும் கடல் உள்ளது.

இத்தகைய சிறப்புமிக்க கடல், பிளாஸ்டிக் கழிவுகளால் சீரழிந்து வருகிறது. கடலில் கலக்கப்படும் கழிவுநீர்களின் வாயிலாக கடலுக்குள் புகும், இந்த பிளாஸ்டிக்கு கள் கொஞ்சம் கொஞ்சமாக தூளாகிவிடும். அதனை மீன்கள், ஆமைகள் போன்றவை உட்கொள்வதால் பெரும்பாதிப்புகளை சந்திக்கின்றன.

உலகில் உள்ள கடல்களை பாதுகாப்பதற்காகவும், அதனை கவுரவிக்கும் வகையிலும் உலக பெருங்கடல்கள் தினம், ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1992-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உச்சி மாநாட்டில், இதற்கான கோரிக்கையை கனடா முன்வைத்தது. அது முதல் இந்த தினம் அதிகாரப்பூர்வமற்ற வகையில் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் 2008-ம் ஆண்டு ஐ.நா.வால் இது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. இதையடுத்து ஆண்டு தோறும் ஜூன் 8-ந் தேதி, 'உலக பெருங்கடல்கள் தின'மாக கடைப்பிடிக்கப்படுகிறது.


Next Story