போலி பெண் டாக்டர் கைது
பிளஸ்-2 வரை மட்டுமே படித்துவிட்டு வீட்டில் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி பெண் டாக்டர் கைது செய்யப்பட்டார்.
பிளஸ்-2 வரை மட்டுமே படித்துவிட்டு வீட்டில் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி பெண் டாக்டர் கைது செய்யப்பட்டார்.
போலி டாக்டர்
ராணிப்பேட்டை முத்துக்கடையை அடுத்த மாந்தாங்கல் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் வள்ளி (வயது 45). இவர் பிளஸ்-2 வரை மட்டுமே படித்துவிட்டு வீட்டில் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் மருத்துவ மற்றும் ஊரகத்துறை இணை இயக்குனர் விஜயா முரளி தலைமையில் டாக்டர் சக்திவேல் மற்றும் மருந்தாளுநர் வேலு ஆகியோர் வள்ளியின் வீட்டில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது வீட்டில் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த வள்ளியை பிடித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உரிய மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்தது உறுதியான நிலையில், வள்ளியை பிடித்து ராணிப்பேட்டை போலீசாரிடம் அவர்கள் ஒப்படைத்தனர். பின்னர் மருத்துவம் பார்த்து வந்த வள்ளியின் வீட்டிற்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
பறிமுதல்
மேலும் சிகிச்சை அளிக்க வைத்திருந்த ஆங்கில மருந்துகளை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து மருத்துவ குழுவினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வள்ளியை கைது செய்தனர். பின்னர் அவரை ோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.