"இனி வெயில் அடித்தாலும் கவலை இல்லை".. உலக கவனத்தை ஈர்த்த ஜப்பான்


இனி வெயில் அடித்தாலும் கவலை இல்லை.. உலக கவனத்தை ஈர்த்த ஜப்பான்
x
தினத்தந்தி 3 Aug 2023 9:16 PM GMT (Updated: 3 Aug 2023 11:17 PM GMT)

சாலையில் வைக்கப்பட்டிருந்த ஏர்கூலரில் காற்றுவாங்கி வெயில் தாக்கத்தை தணித்துக் கொண்டனர்.

டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோடைக்காலம் மோசமான வெப்பநிலையை உமிழ்கிறது. 35 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெயில் பதிவாக. வெப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழியை தேடி திரிகிறார்கள். அப்படி வாடி வதங்குபவர்களுக்கு வரபிரசாதமாக வந்திருக்கிறது மினி ஃபேன். ஏதோ நம்ம ஊரில் சிறார்கள் விளையாடும் கிலுகிலுப்பை போல் காட்சியளிக்கும் மினி பேனை வைத்துக் கொண்டே சாலையில் நடக்கிறார்கள்...

எப்பா வெயில் தாங்க முடியவில்லை என வேதனை தெரிவிக்கும் டோக்கியோ வாசிகள், இப்போது எல்லாம் மினி பேனும், தண்ணீர் பாட்டீல் கையுமாகதான் திரிகிறோம் என்கிறார்கள். வெயிலுக்கு அஞ்சும் மக்கள் ஐஸ்கிரீம் கடைகளை நோக்கி படையெடுக்கிறார்கள்.

சென்சோஜி கோவிலில் சாலையில் வைக்கப்பட்டிருந்த ஏர்கூலரில் காற்றுவாங்கி வெயில் தாக்கத்தை தணித்துக் கொண்டனர். இப்படியே போனால் என்ன செய்வது எனக் குமுறும் அவர்கள்.. எப்படியாவது பருவ நிலை மாற்றத்தில் கவனம் செலுத்துங்கள் என உலக நாடுகளை கேட்கிறார்கள்


Next Story