இறக்குமதி வரி விலக்கு; சமையல் எண்ணெய் விலை குறையும்?


இறக்குமதி வரி விலக்கு; சமையல் எண்ணெய் விலை குறையும்?
x

மத்திய அரசு இறக்குமதிக்கு வரிவிலக்கு அளித்துள்ளதால் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

விருதுநகர்

விருதுநகர்

மத்திய அரசு இறக்குமதிக்கு வரிவிலக்கு அளித்துள்ளதால் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

அதிகரிப்பு

ரிசர்வ் வங்கி கடந்த ஏப்ரல் மாதம் சில்லறை பணவீக்க விகிதம் 6 சதவீதம் ஆக இருக்க வேண்டும் என்று வரம்பு நிர்ணயித்திருந்த நிலையில் சில்லறை பணவீக்க சதவீதம் 7.75 சதவீதமாக அதிகரித்தது. இதேபோன்று மொத்த பணவீக்க சதவீதமும் இதுவரை இல்லாத வகையில் 15.08 சதவீதமாக அதிகரித்தது. இதற்கு சமையல் எண்ணெய், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வே காரணம் என கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், பணவீக்கத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றிற்கு இறக்குமதி வரி விதிப்பிலிருந்து விலக்கு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

2022-2023 மற்றும் 2023-24ம் நிதி ஆண்டுகளில் 20 லட்சம் டன் வரை கச்சா சோயா பீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்ய வாய்ப்புள்ள நிலையில் இறக்குமதி வரி விலக்கு இந்த எண்ணெய் விலை உள்நாட்டிலும் குறையவாய்ப்பை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் மற்ற சமையல் எண்ணெய்களின் விலையும் குறைய வாய்ப்பு ஏற்படும். இதுகுறித்து இத்துறையை சார்ந்த வணிக வட்டாரத்தினர் தெரிவித்ததாவது:-

கட்டுப்பாடு

மத்திய அரசின் இறக்குவரி விலக்கு சலுகையால் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் சர்க்கரை ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 2021-2022 அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான கரும்பு அரவை பருவத்தில் சர்க்கரை இருப்பை பராமரிப்பதற்கும், விலையை கட்டுக்குள் வைப்பதற்காகவும் 2022 ஜூன் 1-ம் தேதி முதல் 100 டன் அளவிற்கு மட்டுமே சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவு 2022 ஜூன் முதல் தேதி முதல் அக்டோபர் 31-ந் தேதி வரை அல்லது மறு உத்தரவு வரும்வரை அமலில் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் சர்க்கரை விலையையும் கட்டுப்படுத்த முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது ஆனாலும் இந்த உத்தரவு அமலுக்கு வந்த பின்னர் தான் நடைமுறையில் சர்க்கரை விலை குறைய வாய்ப்பு ஏற்படுமா? என்பது தெரியவரும்.

இவ்வாறு வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.


Next Story