அரசியல் தேவையில்லை, சினிமாவில் இருந்து கொண்டே நன்மை செய்யலாம் - நடிகர் வடிவேலு


அரசியல் தேவையில்லை, சினிமாவில் இருந்து கொண்டே நன்மை செய்யலாம் - நடிகர் வடிவேலு
x

அரசியல் தேவையில்லை, சினிமாவில் இருந்து கொண்டே நன்மை செய்யலாம் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று இரவு நடிகர் வடிவேலு வந்தார். அவர் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.

சாமி தரிசனத்திற்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாய் சேகர் ரிட்டன், மாமன்னன், சந்திரமுகி 2 உள்ளிட்ட புதிய திரைப்படங்களில் நடித்து வருகிறேன். அரசியல் நமக்கு தேவையில்லை. சினிமாவில் இருந்து கொண்டே நன்மை செய்யலாம். சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் போண்டாமணிக்கு ஏதாவது உதவி செய்வேன். தமிழக அரசின் ஆட்சி நன்றாக உள்ளது.

இவ்வாறு நடிகர் வடிவேலு கூறினார்.

1 More update

Next Story