ஆணி அடிப்பதால் சேதமடையும் மரங்கள்


ஆணி அடிப்பதால் சேதமடையும் மரங்கள்
x
தினத்தந்தி 16 Nov 2022 12:15 AM IST (Updated: 16 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

Trees damaged by nailing

கோயம்புத்தூர்

ஆனைமலையில் விளம்பர பலகைகள் வைக்க ஆணி அடிப்ப தால் மரங்கள் சேதம் அடைகின்றன. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சாலையோர மரங்கள்

ஆனைமலை தாலுகா பகுதியில் சாலையோரங்களில் அதிக எண் ணிக்கையில் மரங்கள் உள்ளன. இதில் பொள்ளாச்சி- சேத்து மடை ரோடு பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டின் இரு புறத்திலும் வேப்பமரம் மற்றும் புளியமரங்கள் அதிகம் உள்ளன. அவை நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

சாலையோரங்களில் உள்ள மரங்கள் பறவைகளின் வாழ்விடமா கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் அந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இதமான சூழலையும் தருகிறது.

விளம்பர பலகைகள்

இந்த நிலையில் சாலையோரங்களில் இருக்கும் மரங்களில் சிலர் ஆணி அடித்து விளம்பர பலகைகளை பொருத்தி செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுகிறது. இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

ஆணிகள் அடிப்பதால் மரங்கள் சேதம் அடைகின்றன. அதோடு ஆணிகள் துருப்பிடித்து மரத்தின் உறுதித்தன்மையை சிதைத்து விடுகிறது. மேலும் ஆணி அடிப்பது மரங்கள் அழிந்து போவதற்கும் காரணமாகி விடுகிறது.

நடவடிக்கை வேண்டும்

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பர பலகைகளை வைக்கின்றனர். அப்போது மரத்தில் உள்ள ஒளி பிரதிபலிப்பான்க ளையும் சேதப்படுத்தி விடுகின்றனர். இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

மேலும் விளம்பர பலகைகள் இருப்பதால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுகிறது. மேலும் ஆணி அடிப்பதால் சேதம் அடைந்து மரமே அழியும் நிலை ஏற்படுகிறது.

எனவே சாலையோரங்களில் உள்ள மரங்களில் ஆணி அடிப்பவர் களுக்கு அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் மரங்கள் மட்டுமின்றி சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும்.

எனவே மரங்களை பாதுகாக்க அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story