கொப்பரை தேங்காய் விலை அதிகரிப்பு
Increase in price of copra coconut
கோயம்புத்தூர்
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் 53 விவசாயிகள் மொத்தம் 233 மூட்டை கொப்பரையை விற்பனைக்காக கொண்டு வந்தனர்
காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கொப்பரை தேங் காய்களை தரம் பிரிக்கும் பணி நடைபெற்றது. இதில், தாராபுரம், காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 7 வியாபாரிகள் கலந்து கொண்டனர்
இதில், 121 மூட்டை முதல் ரக கொப்பரை கிலோ ஒன்றிற்கு ரூ.79.50 முதல் ரூ.86.85 வரை ஏலம் போனது. 112 மூட்டை 2-ம் ரக கொப்பரை கிலோ ஒன்றிற்கு ரூ.64.50 முதல் ரூ.76-க்கு ஏலம் போனது.
தற்போது பெய்யும் பருவமழை காரணமாக கடந்த வாரத்தை விட 142 மூட்டை கொப்பரை குறைவாக வந்து உள்ளது. இதனால் ரூ.3.60 விலை அதிகரித்து உள்ளதாக ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தெரிவித்தார்.
Next Story