கத்தி முனையில் வங்கி ஊழியரிடம் பணம் பறிப்பு


கத்தி முனையில் வங்கி ஊழியரிடம் பணம் பறிப்பு
x
தினத்தந்தி 16 Nov 2022 12:15 AM IST (Updated: 16 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

Extortion of money from bank employee at knife point

கோயம்புத்தூர்


கோவையில் கத்திமுனையில் வங்கி ஊழியரிடம் பணம் வழிப்பறி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வங்கி ஊழியர்

கோவை சுந்தராபுரம் மதுக்கரை மெயின் ரோட்டில் உள்ள ரிஜிஸ்திரார் காலனியை சேர்ந்தவர் நாகராஜ்.இவரது மகன் மணிகண்டன் (வயது 23) இவர் வடகோவையில உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.குறிச்சி எம். எம். பி. நகர் ரோட்டில் நடந்து சென்றார்.அப்போது இவரை 3 பேர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த வெள்ளி கை செயின், வெள்ளி மோதிரம், பணம் ரூ700 ஆகியவற்றைபறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.இதுகுறித்து போத்தனூர் போலீசில் மணிகண்டன் புகார் செய்தார்.

3 பேர் கைது

இன்ஸ்பெக்டர் கதிர்வேல் வழக்கு பதிவு செய்து போத்தனூர் மைல்கல், பாரதிநகரை சேர்ந்த சாருக்கான் என்ற பெருக்கான் (வயது24) போத்தனூர் திருமறை நகரை சேர்ந்த ரியாஸ் கான் (28) சாரதா மில் ரோடு, பாரதிநகரை சேர்ந்த காஜா மொய்தீன் (23) ஆகியோரை கைது செய்தார். இவர்களில் சாருக்கான் மீது போத்தனூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு திருட்டு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கஞ்சா கடத்தல் வழக்கில் குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

காஜா மொய்தின் மீதும் போத்தனூர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளது.ஹரி என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். கைதான 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

1 More update

Next Story