பால் விலை உயர்வை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
தியாகதுருகத்தில் பால் விலை உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி
கண்டாச்சிமங்கலம்,
பால் விலை மற்றும் மின்சார கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க. வடக்கு ஒன்றியம் சார்பில் தியாகதுருகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வடக்கு ஒன்றிய தலைவர் ரகுநாத பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சிவப்பிரகாசம், மாநில திட்ட பொறுப்பாளர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஜானகிராமன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அலுவலக செயலாளர் கண்ணன் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். இதில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story