மணப்பாறை ஒன்றிய அலுவலக வாயிலில் அமர்ந்து பணியாளர்கள் போராட்டம்


மணப்பாறை ஒன்றிய அலுவலக வாயிலில் அமர்ந்து பணியாளர்கள் போராட்டம்
x

The workers are protesting by sitting at the gate of the Manaparai union office

திருச்சி

மணப்பாறை:

போராட்டம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வேங்கைக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மம்பட்டி பகுதி மக்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்களுக்கு மற்ற கிராமங்களை போல் முறையாக பணி வழங்காமல் பாரபட்சமாக பணி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் பணி வழங்கினாலும் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் வழங்கும் நிலை இருப்பதாக கூறி, பணியாளர்கள் நேற்று மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களின் கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


Next Story