கோபி அருகே கல்லூரி விடுதியில் தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை


கோபி அருகே கல்லூரி விடுதியில் தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை
x

தற்கொலை

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தற்கொலை

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் வெங்கடவராஜ் (வயது 19). இவர் ஈரோடு மாவட்டம் கோபி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பாரா மெடிக்கல் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று கல்லூரி விடுதியில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்குப்போட்டு வெங்கடவராஜ் தற்ெகாலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

உடனே இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் கோபி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் கோபி போலீசார் விரைந்து சென்று வெங்கடவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் வெங்கடவராஜ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story