அதிமுக விவகாரம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்


அதிமுக விவகாரம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
x

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது.

சென்னை,

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் வடிவமைத்த ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து விளக்கம் அளிக்க அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது.

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில், கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு பழனிசாமி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்பதவிகளில் யாரும் இல்லை என்று கூறி, அக்கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகம் திருப்பிஅனுப்பியது.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என முகவரியிட்டு கடிதம் எழுதியது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது."இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்களின் படியே கடிதம் அனுப்பப்பட்டது" என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.


Next Story