பால சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு மகா அபிஷேகம்


பால சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு மகா அபிஷேகம்
x

பால சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் விநாயகர் கோவிலுக்கு அருகில் பீடத்திலிருந்து 2 அடி உயரமுள்ள பால சஞ்சீவி ஆஞ்சநேயர் சுதை சிற்பம் புதிதாக நிறுவப்பட்டது. பால சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு மகா அபிஷேகம் செய்ய அப்பகுதி பொதுமக்கள் முடிவு செய்தனர். இதையொட்டி ஏக கால பூஜைகள் நடைபெற்றன. பின்னர் புனித நீர் உள்ள கடத்திலிருந்து பால சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story