பந்தலூர் அருகே காட்டு யானைகள் அட்டகாசம்


பந்தலூர் அருகே காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 3 July 2023 6:45 PM GMT (Updated: 4 July 2023 6:05 AM GMT)

பந்தலூர் அருகே காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகிறது.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு தேயிலைதோட்டம் ரேஞ்ச் எண் 2-ல் பாலவாடிலைன்ஸ், காவயல், பத்துலைன்ஸ், மழவன்சேரம்பாடி, கோட்டப்பாடி, எடத்தால், கருத்தாடு, தட்டாம்பாறை, அய்யன்கொல்லி, மூலைகடை, செம்பகொல்லி, பாதிரிமூலா உள்பட பல பகுதிகளில் 25- க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பலபிரிவுகளாக ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் காட்டு யானைகள் தேயிலை தோட்டங்களில் உள்ள குடியிருப்புகளையும் விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து வாழை தென்னை பாக்கு உள்ளிட்ட பயிர்களையும் உடைத்து மிதித்து நாசம் செய்து வருகிறது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு 2 மணிக்கு கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண் -2 பால்வாடி லைன்ஸ் பகுதியில் 2 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து தொழிலாளர்கள் குடியிருப்புகளை முற்றுகையிட்டது. பிறகு தவமணி சிம்பு ஆகியோரின் வீட்டின் அருகே இருந்தமரத்தை வீட்டின் மேற்கூரையில் தள்ளிவிட்டது. இதனால் மேற்கூரை பழுதடைந்தது. அதனால் தொழிலாளர்கள் அவசர தேவைகளுக்கு வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

சம்பவம் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த், வனகாப்பாளர் குணசேகரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அங்கு சென்று, காட்டுயானைகளை விரட்டி அடித்தனர். மேலும் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story