பிளஸ்-1 தேர்வில் 90.53 சதவீத மாணவர்கள் தேர்ச்சி


பிளஸ்-1 தேர்வில் 90.53 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
x

தர்மபுரி மாவட்டத்தில்பிளஸ்-1 தேர்வில் 90.53 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

தர்மபுரி

தமிழ்நாட்டில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. மாணவ, மாணவிகளின் செல்போன் எண்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டன. இதன் மூலம் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர். தர்மபுரி மாவட்டத்தில் 103 அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 176 பள்ளிகளைச் சேர்ந்த 9,137 மாணவர்கள், 9,725 மாணவிகள் என மொத்தம் 18,862 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினார்கள். இவர்களில் 8,001 மாணவர்கள், 9,075 மாணவிகள் என மொத்தம் 17,076 பேர் தேர்ச்சி பெற்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி மொத்தம் 90.53 சதவீதமாகும். மாணவர்களை விட மாணவிகள் 6.35 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிளஸ்-1 தேர்ச்சி 87.97 சதவீதமாகும். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு மாணவ, மாணவிகள் தேர்ச்சி 2.56 சதவீதம் அதிகரித்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 11,196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தேர்ச்சி 87.27 சதவீதமாகும். அரசு பள்ளிகளை பொருத்தவரை மாணவர்களை விட மாணவிகள் 9.31 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ்-1 தேர்வு முடிவுகள்படி தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம் கடந்த ஆண்டு பெற்ற 25- வது இடத்திலிருந்து இந்த ஆண்டு 21-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.


Next Story