கலெக்டர் அலுவலக பெண் ஊழியர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு


கலெக்டர் அலுவலக பெண் ஊழியர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 16 Nov 2022 12:15 AM IST (Updated: 16 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

A case has been registered against 2 women employees of the collector's office

கோயம்புத்தூர்

கோவை

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பிளம்பரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த பெண் ஊழியர்கள் 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு வேலை

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தவர் சுபஹான் நிஷா.இவர் இரும்பொறை பக்கம் உள்ள பட்டாசுக்காரன் பாளையத்தைச் சேர்ந்த சுதர்சன் (வயது 27), என்பவரிடம் அரசு அலுவலகத்தில் உதவியாளர்வேலைகாலியாக இருப்பதாகவும், அதை வாங்கி தருவதாகவும் கூறினாராம். இதற்காக ரூ.4 லட்சம் கேட்டுள்ளார்.

இதை நம்பி சுதர்சன் ரூ.4 லட்சத்தை சுபஹான் நிஷாவிடம் கொடுத்தார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்காததால், பணத்தை திருப்பி கேட்டபோது மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து சுதர்சன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார்.

2 பேர் மீது வழக்குப்பதிவு

போலீசார் மக்கள் தொடர்பு அதிகாரி அலுவலக கணக்காளர் சுபஹான் நிஷா, கருவூல ஊழியர் சாந்தி ஆகியோர் மீது மோசடி உட்பட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

சுபஹான் நிஷா இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து மேலும் பலரிடம் மோசடி செய்தார்களா? என்று விசாரணை நடைபெறுகிறது.


Next Story