பால் விலை, சொத்து வரி, மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி விழுப்புரம் மாவட்டத்தில் பா.ஜ.க.வினர் 32 இடங்களில் ஆர்ப்பாட்டம் ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு
BJP protest
பால் விலை, சொத்து வரி, மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும், தி.மு.க. அரசை கண்டித்தும் நேற்று தமிழகம் முழுவதும் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த வகையில் விழுப்புரம் நகர பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் வடிவேல் பழனி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மீனாட்சி நித்திய சுந்தர், விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் கலிவரதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் மாநில உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு துணைத்தலைவர் வெங்கடேசன், மாவட்ட துணைத்தலைவர் குபேரன், மாவட்ட பொதுச்செயலாளர் ராம.ஜெயக்குமார், பொருளாளர் சுகுமார், செய்தி தொடர்பாளர் தாஸசத்யன், முன்னாள் நகர தலைவர் ஜெய்சங்கர் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செஞ்சி
இதேபோல் செஞ்சி கூட்ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு செஞ்சி நகர தலைவர் தங்கராமு தலைமை தாங்கினார். இதில் தொழில் பிரிவு மாநில செயலாளர் கோபிநாத் கலந்து கொண்டு கோரிக்கைள் குறித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் சிவசுப் பிரமணியம், மாவட்ட அமைப்பாளர் விஷ்ணு ராஜன், பாரதீய ஜனதா கட்சி விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவர் சரவணன், ஐ.டி. பிரிவு கோட்ட பொறுப்பாளர் ஸ்ரீரங்கன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட துணை தலைவர் சந்திரசேகர், ஐ.டி. பிரிவு மாவட்ட தலைவர் சத்தியசீலன், நகர பொதுச்செயலாளர் சரவணன், கமலநாதன், நகர நகர பொருளாளர் செந்தில் குமார், மகளிர் அணி ஞானமணி, துணை தலைவர் தாமரைச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செஞ்சி மேற்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் ஆலம்பூண்டியில் நடந்த ஆப்பாட்டத்திற்கு மேற்கு ஒன்றிய தலைவர் பாபு தலைமை தாங்கினார். இதில் பொதுக்குழு உறுப்பினர் பசுமலை நிர்வாகிகள் ரவிவர்மன், குமார், நாராயணசாமி, நரேந்திரன், ரமேஷ், பழனி, ரவிச்சந்திரன், சத்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஒலக்கூர்
ஒலக்கூர் மேற்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் தமிழக அரசை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒலக்கூர் ஒன்றிய தலைவர் ராமராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய தலைவர் சிவபெருமான் முன்னிலை வகித்தார். மாநில இளைஞரணி செயலாளர் தினேஷ் கண்டனம் தெரிவித்து பேசினார்.
இதில் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் ராஜா, ஒன்றிய பொதுச்செயலாளர்கள் ராமு, செந்தில் முருகன், மதன்குமார், ஒன்றிய பொருளாளர் ஐயப்பன்மற்றும் ஹரிஹரன், ரஜினிகாந்த், பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திண்டினத்தில் பா.ஜ.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் தினேஷ் குமார், ஜின்ராஜ், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாநிலத் துணைத் தலைவர் ஏ.ஜி. சம்பத், சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் எத்திராஜ் நன்றி கூறினார்.
32 இடங்கள்
மேலும், கோலியனூர், காணை, வளவனூர், சிறுவந்தாடு, கண்டமங்கலம், கோட்டக்குப்பம், ஆரோவில், மரக்காணம், கஞ்சனூர், அன்னியூர், நேமூர், விக்கிரவாண்டி, மணம்பூண்டி, முகையூர், அரகண்டநல்லூர் உள்பட மாவட்டம் முழுவதும் 32 இடங்களில் பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கிடையே மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 1000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.