மேலும் 4 பேர் கைது
4 more arrested
நாமக்கல்
பள்ளிபாளையம்:-
பள்ளிப்பாளையம் அருகே வெடியரசம்பாளையத்தை சேர்ந்தவர் ஜவுளி அதிபர் மணி. இவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய கும்பல் புகுந்து ரூ.28 லட்சம் மற்றும் 18 பவுன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை தொடர்பாக பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த கொள்ளை தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பலரை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே பள்ளிப்பாளையம் ஒட்டமெத்தை பகுதியை சேர்ந்த வேணுகோபால் (52), ராஜா (36), கார்த்தி (27), கோவில் பூசாரி ரமேஷ் (45) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.47 ஆயிரம் மற்றும் கார், மோட்டார் சைக்கிளை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story