72 விவசாயிகளுக்கு ரூ.1¼ கோடியில் வேளாண் எந்திரங்கள்


72 விவசாயிகளுக்கு ரூ.1¼ கோடியில் வேளாண் எந்திரங்கள்
x

72 விவசாயிகளுக்கு ரூ.1¼ கோடியில் வேளாண் எந்திரங்களை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

வேலூர்

வேலூர் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வேளாண்மை பொறியியல்துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், மேயர் சுஜாதா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு 72 விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 41 லட்சம் மதிப்பிலான பவர்டில்லர், களையெடுப்பான் உள்ளிட்ட வேளாண் எந்திரங்கள் வழங்கினார். இந்த எந்திரங்களுக்கு ரூ.57 லட்சத்து 50 ஆயிரம் அரசின் மானியமாக வழங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, உதவிகலெக்டர் கவிதா, வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளர் வி.எஸ்.ஸ்ரீதர், உதவி செயற்பொறியாளர் என்.பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story