கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடம் மீட்பு


கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான   ஆக்கிரமிப்பு இடம் மீட்பு
x

கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடம் மீட்பு

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை அருகே கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடம் மீட்கப்பட்டது.

புகார்

நாகையை அடுத்த செம்பியன்மகாதேவியில் கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடங்களில் செங்கல்சூளைகள் அமைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக இந்து சமய அறநிலைய துறைக்கு புகார் வந்தது.

புகாரின் பேரில் உதவி ஆணையர் ராணி தலைமையில் சிறப்பு தாசில்தார் அமுத விஜயரங்கன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் உள்ளிட்ட போலீசார் வருவாய்த்துறையினர், கோவில் செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் பணியாளர்கள் உதவியுடன் வந்து அந்த இடத்தை பார்வையிட்டனர்.

ரூ.1 கோடி ஆக்கிரமிப்பு இடம் மீட்பு

அப்போது கோவிலுக்கு சொந்தமான 9 ஏக்கரில் செங்கல்சூளைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆக்கிரமிப்புகள் பொக்லின் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

பின்னர் அந்த இடத்தில் வேலி அமைத்து, விளம்பர பலகை வைக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.


Related Tags :
Next Story