உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடி வருவாய்


உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடி வருவாய்
x
தினத்தந்தி 9 Sept 2023 1:30 AM IST (Updated: 9 Sept 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடி வருவாய் கிடைத்தது.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடி வருவாய் கிடைத்தது.

மாசாணியம்மன் கோவில்

கோவை மாவட்டம் ஆனைமலையில் உப்பாற்றங்கரையில் மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அம்மன் சயன நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.

அம்மனை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். அவர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கோவில் வளாகத்தில் 22 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.

காணிக்கை எண்ணும் பணி

இந்த உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த பணியில் சலவநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த பக்தர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

இதில் தட்டு காணிக்கை உண்டியல் மூலம் ரூ.25 லட்சத்து 15 ஆயிரத்து 485, நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூ.80 லட்சத்து 24 ஆயிரத்து 881 என மொத்தம் ரூ.1 கோடியே 5 லட்சத்து 40 ஆயிரத்து 366 வருமானம் கிடைத்தது.

தங்கம், வெள்ளி

மேலும் 442 கிராம் தங்கம், 590 கிராம் வெள்ளியும் கிடைத்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், அறங்காவலர்கள் திருமுருகன், மஞ்சுளா தேவி, தங்கமணி, மருதமுத்து மற்றும் உதவி ஆணையர் ரா.விஜயலட்சுமி, தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, கண்காணிப்பாளர் புவனேஸ் வரி, ஆய்வாளர் பா.சித்ரா, பாதுகாப்பு அதிகாரி முத்துராமன் ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற்றது.


Next Story